பெற்றோர் தகவல் (Tamil)

பெற்றோர் தகவல்

Tamil

தேசிய எதிர்கால தினம் – அத்தியாவசியங்களின் தொகுப்பு

சுவிட்சர்லாந்தில் பலவிதமான தொழிற்பயிற்சிகள் மற்றும் தொழில்வாழ்க்கைகள் இன்றளவும் நெருங்கிய தொடர்புடையவையாக, பெருவாரி ஆண்கள் அல்லது பெண்களால் தேர்ந்தெடுக்கப்படுபவையாக உள்ளன. இதைச் சமாளிப்பதற்கும், இளம் பருவத்தினரிடையே ஒரு திறந்த நிலை, பாலின சுயாதீன தொழில்வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் திட்டமிடலை ஊக்குவிப்பதற்கு சுவிட்சர்லாந்து முழுவதும் தேசிய எதிர்கால தினத்தன்று நூற்றுக்கணக்கான செயற்பாடுகள், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் தங்கள் கதவுகளைத் திறந்துவைத்துள்ளன.

5 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் பணியிடத்தில் தங்களின் தனிப்பட்ட சூழலில் உள்ள ஒருவரை அவதானிப்பதன் மூலம் அல்லது ஆச்சரியமூட்டும் சிறப்புத் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் கற்றுக்கொள்ள முடியும். “மாறும் கண்ணோட்டம்” என்ற குறிக்கோளுரையின் அடிப்படையில் அவர்கள் பாலின-இயல்பற்ற தொழில்முறையிலான பணி மற்றும் வாழ்க்கைப் பகுதிகள் மற்றும் தொழில்வாழ்க்கைகளை, தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் பல விருப்பத்தேர்வுகளை கற்றறிந்து அவர்கள் கண்டடைகிறார்கள்.

திட்ட கண்ணோட்டம்

உங்களுக்கு 5, 6 மற்றும் 7 ஆம் வகுப்புகள் எவையேனும் ஒன்றில் படிக்கும் குழந்தை உள்ளதா? எதிர்கால தினத்தில் பங்கேற்பதற்கு கீழே தரப்பட்டுள்ள வழிகள் ஏதாவதொன்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள்:

1. அடிப்படை திட்டம்: குழந்தைகள், பணியில் தங்களுக்கு நெருக்கமாக உள்ள ஒரு நபரை அவதானித்து கற்றுக்கொள்ளுதல்.

ஒரு நபரை சேர்ந்துகொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கையில் பாலின-இயல்பற்ற தொழில்களைக் கண்டறிவதே நோக்கமாக இருக்க வேண்டும்:

  • சிறுமிகள், தங்களின் சூழலில் உள்ள, ஆண்களின் எண்ணிக்கை மிகுந்திருக்கும் தொழிலில் பணியாற்றிவரும் ஒரு நபருடன் இணைவார். அந்த நபர், அவருடைய அப்பாவாக, ஞானத்தந்தையாக அல்லது அண்டை வீட்டாராக இருக்கலாம்.
  • சிறுவர்கள், தங்களின் சூழலில் உள்ள, பெண்களின் எண்ணிக்கை மிகுந்திருக்கும் தொழிலில் பணியாற்றிவரும் ஒரு நபருடன் இணைவார். அந்த நபர், அவருடைய அம்மாவாக, அத்தையாக அல்லது அண்டை வீட்டாராக இருக்கலாம்.

2. சிறப்புத் திட்டங்கள்: குழந்தைகள் ஒரு சிறப்பு திட்டத்தில் பங்கேற்கிறார்கள்

எதிர்கால தினத்திற்காக பல செயற்பாடுகள், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் சிறப்புத் திட்டங்களை நடத்துகின்றன. உங்களின் குழந்தைகள் பங்கேற்பதற்குரிய சிறப்புத் திட்டங்களை நீங்கள் கீழே காணலாம்:

  • திட்டங்கள் பற்றிய பொதுவான தகவல்களுக்கு: «Spezialprojekte für Mädchen» அல்லது «Spezialprojekte für Jungen».
  • பக்கத்தில் «Angebote» உங்கள் குழந்தை தனது மண்டலம் அல்லது வசிப்பிடத்தில் உள்ள சிறப்புத் திட்டத்தில் தன்னைப் பதிவுசெய்து இணைந்துகொள்ளலாம்.

பங்கேற்பு குறித்த நடைமுறை தகவல்

உங்களின் நிறுவனத்தில்

எதிர்கால தினத்திற்காக பணியாற்ற உங்களுடன் உங்கள் குழந்தையை அழைத்துவரலாமா என உங்கள் நிறுவனத்தில் கேளுங்கள், பிறகு உங்களின் சக பணியாளர்களிடம் அது பற்றி தெரிவியுங்கள். தற்போது, பெரும்பாலான நிறுவனங்கள் எதிர்கால தினத்தை தங்களின் ஆண்டு திட்டங்களின் ஒரு நிரந்த அம்சமாக வைத்துள்ளன.

பள்ளிக்கூடத்தில்

உங்கள் குழந்தையின் வகுப்பு எதிர்கால தினத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதா என பள்ளியில் கேளுங்கள். அது பங்கேற்கவில்லை என்றால், உங்களின் குழந்தைக்காக நீங்கள் பகிர்மான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கலாம். வெவ்வேறு மண்டலங்கள் வெவ்வேறு பங்கேற்பு தேவைகள் -ஐ கொண்டுள்ளன. எதிர்கால தினத்தில் பங்கேற்காத மற்றும் பள்ளியில் தங்கியிருக்கின்ற குழந்தைகளுக்கு இதற்குப் பதிலாக பள்ளி-உள்ளமை திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது.

திட்ட-நாள் கட்டமைப்பு

உங்கள் குழந்தை தானாகவே எந்தப் பணிக்கு முயற்சிக்கலாம் என்பதை எதிர்கால தினத்திற்கு முன்கூட்டியே பரிசீலனை செய்யுங்கள். இந்தத் தினத்திற்கான முன்னேற்பாட்டிற்கு ஒரு சரிபார்ப்புப் பட்டியல் உங்களுக்கு உதவும்.

நேர்காணல்

உங்களின் சக பணியாளரிடம், உங்களின் குழந்தையால் அவர் நேர்காணல் செய்யப்படுவதற்கு உடன்படுவாரா என்று கேளுங்கள். எதிர்கால தினமானது மாணவர்கள் தங்களுக்கு சாத்தியமுள்ள தொழில்வாழ்க்கை விருப்பத்தேர்வுகளின் வேற்றுமைகளை அறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் ஆகும். எனவே, உங்கள் குழந்தையின் கண்ணோட்டத்தில் அவர்களின் பாலினத்திற்கு குறியடையாளமில்லாத பணியில் உள்ள நபரை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த இணையதளமானது நேர்காணல் வார்ப்புரு ஒன்றை வழங்குகிறது.

எதிர்கால தினம் பற்றிய வினாப்பட்டியல்

திட்ட நாளின் இறுதியில் எதிர்கால தினம் பற்றிய வினாப்பட்டியல் -ஐ உங்களின் குழந்தையைக் கொண்டு நிரப்பி, அதனை தேசிய எதிர்கால தின அலுவலகம் -இல் சமர்ப்பியுங்கள்.

தொழில்வாழ்க்கை விருப்பத்தேர்வையொட்டி இதர செயற்பாடுகள்

உங்களின் குழந்தை பங்கேற்க ஆதரவளிப்பதற்கு அடிப்படைத் திட்டம் அல்லது ஒரு சிறப்புத் திட்டம் மட்டுமின்றி, மேலும் பல விருப்பத்தேர்வுகளும் உள்ளன. விளையாட்டு பற்றிய தகவல், ஆவணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை இந்த இணைப்பில் காணலாம்.

தொடர்புக்கு

உங்களுடைய கேள்விகளுக்கு உற்சாகத்துடன் பதிலளிக்க எதிர்கால தின குழு காத்திருக்கிறது.

தொலைபேசி: 041 710 40 06
மின்னஞ்சல்: info@nationalerzukunftstag.ch

Noch
Fragen?

Antworten finden

Der Zukunftstag findet jeweils am zweiten Donnerstag im November statt. Nächster Termin ist der Donnerstag, 14. November 2024. Weitere Daten finden Sie hier.

Es ist wichtig, den Zukunftstag von einem normalen Berufsschnuppertag zu unterscheiden. Am Zukunftstag steht das Entdecken geschlechtsuntypischer Berufe und Tätigkeiten im Fokus. Ziel ist es, eine ausgewogene Vertretung von Frauen und Männern in der Berufswelt zu fördern. Kinder und Jugendliche werden ermutigt, Ausbildungen und Berufe in Betracht zu ziehen, in denen ihr Geschlecht bisher untervertreten ist. Deshalb sind die Angebote nach Geschlecht aufgeteilt. Wir berücksichtigen das Geschlecht, mit dem sich das Kind identifiziert: Für trans oder non-binäre Schüler:innen und deren Eltern steht das Team der Geschäftsstelle des Zukunftstags bei Bedarf gerne beratend zur Seite.

Der Zukunftstag richtet sich an Schülerinnen und Schüler der 5. bis 7. Klasse. Je nach Kanton, Spezialprojekt und Angebot gelten abweichende Teilnahmebedingungen.

Der Zukunftstag findet in Zusammenarbeit mit den Schulen statt, jedoch liegt es in deren Ermessen, welche Schulstufe am Zukunftstag teilnehmen darf. Je nach Kanton gelten andere Teilnahmebedingungen. Nicht bei allen Schulen ist der Zukunftstag im Jahresplan integriert. Am besten bei der Klassenlehrperson nachfragen und allenfalls das Dispensationsgesuch ausfüllen.

Die Eltern sind für den Hin- und Rückweg der Kinder verantwortlich. Bei den Spezialprojekten werden sie betreut. Einzelne Betriebe und Unternehmen bieten Programmpunkte für Eltern an.